Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 6, 2019

வாட்ஸ்ஆப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதியை பெறுவது எப்படி? ஆன்ட்ராய்ட் போன் ஓனர்கள் இதை செய்தால் போதும்!

வாட்ஸ் அப் செயலியில் ஃபிங்கர் ப்ரின்ட் லாக் வசதியானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது ஆண்ட்ராய்டு மற்றும் IOS செயலிகளுக்கு பல்வேறு விதமான அப்டேட்களை கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனமானது ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதியை தனது வாட்ஸ் அப் செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது.



இதன் மூலம் வாட்ஸ் அப் செயலியை நாம் ஃபிங்கர் பிரிண்ட் லாக் செய்து யாரும் பார்க்காத வண்ணம் ரகசியமாக வைத்துக் கொள்ளலாம். பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ள போன்களில் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸப் நியூ வெர்ஷன் 2.19.221 அப்டேட் செய்து கொள்ளவும். Setting -> Account-> Privacy -> Finger print lock என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்னர் ஃபிங்கர் பிரிண்ட் லாக் என்ற ஆப்ஷனுக்கு சென்று அதை Enable செய்யவும்.
எவ்வளவு நேரத்துக்கு பின்னர் ஃபிங்கர் பிரிண்ட் ஐ பயன்படுத்தி வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்யலாம் என்ற ஆப்ஷனும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. User கள் தங்களுக்கு ஏற்ப நேரத்தினை அதில் செட் செய்து ஃபிங்கர் பிரிண்ட் லாக்கை தங்களது வசதிக்கேற்ப பயன்படுத்தலாம்.



இதுமட்டுமல்லாமல் வாட்ஸ் அப்பில் வரும் மெசேஜ்கள் மற்றும் அதை யார் அனுப்பினார்கள் என்பதை அறியும் நோட்டிபிகேஷன்களை லாக் செய்யும் வசதியும் இந்த அப்டேட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.