Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 3, 2019

"நான் சுஜித் பேசுகிறேன்!" - குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தி.மலை கலெக்டர்


திருச்சி மாவட்டம் மணப்பறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயதுக் குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்ததையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும் என ஆட்சியர் கந்தசாமி உடுத்தவிட்டிருந்தார். அதோடு, அவரே நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார். குழந்தை சுஜித் இறந்ததையடுத்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆழ்துளைக் கிணறுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, திருவண்ணாமலை மாவட்டம், தென்அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில் பயன்படுத்தப்படாத நிலையிலிருந்த ஆழ்துளை கிணற்றை மாணவர்களின் முன்னிலையில் மூடினார்.



இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறுகையில், ``குழந்தை சுஜித்தின் இறப்பு மறக்க முடியாத ஒன்று
அவனை மீட்டுவிடுவார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் மூன்று நாள்களாக இரவு முழுவதும் தூங்காமல் டி.வி.யின் முன்பே அமர்ந்திருந்தேன். சுஜித்தின் இறப்பு என்னை மிகவும் பாதித்தது. அப்போதே, ஆழ்துளைக் கிணறுகள் பற்றி முழுமையாகத் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தேன். `பள்ளிக் குழந்தைகளிடம் ஆழ்துளைக் கிணறுகள் பற்றிய விழிப்புணர்வைப் பள்ளி ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்' என்று கூறியிருக்கிறேன். அதன் முதற்கட்டமாகப் பள்ளி குழந்தைகளின் முன்னிலையில், பயனில்லாத ஆழ்துளைக் கிணற்றை மழைநீர் சேகரிப்பாக மாற்றி அதன் அருகே சுஜித்தின் நினைவாகக் கல்வெட்டை வைத்து, சுஜித்திற்கு அஞ்சலி செலுத்தி மூடியிருக்கிறோம்" என்றார்.



மேலும் அவர் கூறுகையில், ``கடந்த 4 நாள்களில் 5,804 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில், மழைநீர் சேகரிப்பாக மாற்றக் கூடியதை மாற்றியும், பயன்படுத்த முடியாத ஆழ்துளைக் கிணறுகள் முழுமையாகவும் மூடப்பட்டன.

சுஜித்தின் நிவாக வைக்கப்பட்ட கல்வெட்டு
இப்பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உள்ளாட்சி நிர்வாகம் (நகராட்சிகள் பேரூராட்சிகள் ஊராட்சிகள்) வருவாய்த் துறை காவல் துறை மூலமாகவும் மேலும் 25 சதவிகிதம் பொதுமக்கள் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்பட்டது. மேற்கொண்டு மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் கண்டறியப்பட்டால் பொதுமக்கள் உடனடியாக 1800-425-3678 மற்றும் 04175-233141 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் எனது கைப்பேசி 94441 37000 எண்ணிலும் தொடர்பு கொண்டும் வாட்ஸ்அப் தகவலாகவும் தெரிவிக்கலாம்.

கிராமப்புறங்களில் ஆழ்துளைக் கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்த வெளி கிணறுகள் தோண்டுபவர்கள், சம்மந்தப்பட்ட ஊராட்சியின் தனி அலுவலரின் முன் அனுமதி பெற வேண்டும். `ரிக்' வைத்திருப்பவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் பதிவுச் சான்று பெற வேண்டும் என்ற விதிமுறைகளின் அடிப்படையில், பழுதடைந்த ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய்க் கிணறு மற்றும் திறந்த வெளி கிணறுகளைக் கண்டறிந்து அவற்றை முறையாக மூடப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



ஆழ்துளைக் கிணறை மூடி அஞ்சலி செலுத்தியபோது
மேற்படி, ஆய்வினை தனி அலுவலர்கள் பணிப் பார்வையாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்து பழுதடைந்த ஆழ்துளைக் கிணறு, திறந்த வெளி கிணறுகள் ஆய்வு அலுவலர்களால் பட்டியலிடப்பட வேண்டும். அவைகள் முறையாக மூடப்பட்டும் அல்லது மழைநீர் சேமிப்புக்காகப் பயன்படும் வகையில் மற்றும் செய்ய வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் மூடப்படாமல் பழுதடைந்த ஆழ்துளைக் கிணறு ஆழ்குழாய்க் கிணறு மற்றும் திறந்த வெளி கிணறுகள் இல்லாத வகையில் மேற்படி பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது" என்றார்.