Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, November 16, 2019

‘நெகிழி மாசில்லா தமிழ்நாடு’ உருவாக்குவோம்

பள்ளிக்கல்வித் துறை, கிரீன் லைஃப் தொண்டு நிறுவனம் இணைந்து அறிமுகம் செய்துள்ள ‘நெகிழி மாசில்லா தமிழ்நாடு’ இயக்கத்தை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். ‘நெகிழி மாசில்லா தமிழ்நாடு’ என 10 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்கும் உலக சாதனை நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
நெகிழி (பிளாஸ்டிக்) பொருட் களின் பயன்பாட்டால் ஏற்படும் சுகாதார, சுற்றுச்சூழல் பாதிப்பு களை கருத்தில் கொண்டு, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட் களுக்கு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இதை சிறப்பாக நடைமுறைப் படுத்த தமிழக தலைமைச் செய லாளர் தலைமையில் 10 உறுப் பினர்கள் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.




இதைத் தொடர்ந்து, ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ உருவாக்க மாநில அளவிலான பிரச்சா ரத்தை தொடங்கி வைக்கும் விதமாக, அதற்கான இலச்சினை, www.plasticpollutionfreetn.org என்ற இணையதளம், பிரத்யேக செல் போன் செயலி ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி கடந்த 2018 ஆகஸ்ட் 23-ம் தேதி தொடங்கி வைத்தார்.
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்ப்பது, அதற்கான மாற்றுப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த நடமாடும் விழிப்புணர்வு பிரச்சார வாகன சேவையை கடந்த 2018 டிசம்பர் 10-ம் தேதி தொடங்கி வைத்தார்.




ஒருமுறை மட்டுமே பயன்படுத் தக்கூடிய பிளாஸ்டிக் பொருட் களுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வரும் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் தலைமையில் கடந்த ஜூன் 17-ம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, பள்ளிக் கல்வித் துறை, கிரீன் லைஃப் தொண்டு நிறுவனம் இணைந்து ‘நெகிழி மாசில்லா தமிழ்நாடு’ என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தை முதல் வர் பழனிசாமி, குழந்தைகள் தினமான நவ.14-ம் தேதி (நேற்று) சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.









இதில், உலக சாதனை நிகழ் வாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த 10 லட்சம் பள்ளி, மாணவ, மாணவிகள் ‘நெகிழி மாசில்லா தமிழ்நாடு’ என்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.




‘‘நெகிழி மாசில்லா தமிழ் நாடு. நெகிழ்ச்சியான தமிழ்நாடு. மகிழ்ச்சியான தமிழ்நாடு. உயிரி னங்களுக்கு கேடு விளைவிக்கும் நெகிழியை தவிர்த்து, அனைத்து இடங்களையும் தூய்மையாக வைப்பது மட்டுமின்றி, மனித உயிர்களுக்கு தீங்கு தரக்கூடிய நெகிழியை நம் அன்றாட வாழ்வில் இருந்து அகற்ற வேண்டும்.














ஏற்கெனவே புழக்கத்தில் இருக் கும் நெகிழியை சரியான முறை யில் அழித்து அதற்கு மாற் றான இயற்கைப் பொருட் களை பயன்படுத்தி மகிழ்ச்சி யாகவும், நலமாகவும் வாழ் வோம். தலைமுறை போற்றும் தொலைநோக்குத் திட்டமான நெகிழி மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்’’ என்று முதல் வர் தலைமையில் 3 மாவட்டங் களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் உறுதி ஏற்றனர்.




இதையடுத்து, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை முதல்வர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.














இந்த நிகழ்ச்சியில், அமைச் சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், கிரீன் லைஃப் தொண்டு நிறுவன நிர்வாகிகள் விருகை வி.என்.ரவி எம்எல்ஏ, தலைமைச் செயலாளர் கே.சண் முகம், பள்ளிக்கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ், மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏ.வி.வெங்கடாசலம், உறுப்பினர் செயலர் டி.சேகர், பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.