Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, November 27, 2019

அரசு மலைப்பள்ளிக்கு மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருது


சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், மண்ணூர்மலை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 2018- 2019 ஆம் கல்வி ஆண்டில் மாவட்ட அளவில் தொடக்கக் கல்வித்துறையில் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.இவ்விருதிற்கான கேடயத்தை பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் , மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ,மாவட்ட ஆட்சிதலைவர் ,முதன்மை கல்வி அலுவலர் முன்னிலையில் பள்ளிக்கு வழங்கினார்கள்.





விருது பெற்ற மண்ணூர்மலை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு ஆத்தூர் மாவட்டக்கல்வி அலுவலர் ,மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரக்கல்வி அலுவலர்கள் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர்