Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 6, 2019

IBPS SO 2019: ஐபிபிஎஸ் சிறப்பு அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!


நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது. மொத்தம் 1163 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.



நிர்வாகம் : பொதுத்துறை வங்கிகள்

தேர்வு வாரியம் : வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : சிறப்பு அதிகாரி

மொத்த காலிப் பணியிடம் : 1163

இப்பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஊதியம் உள்ளிட்ட இதர விபரங்கள் விரிவில் அறிவிக்கப்படும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.ibps.in/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :
எஸ்.சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 100
இதர விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600



கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் : 2019 நவம்பர் 26

தேர்வு முறை :

இத்தேர்வானது முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

முக்கியத் தேதிகள் :
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் 06.11.2019 முதல் 26.11.2019
முதல்நிலைத் தேர்விற்கான நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ய டிசம்பர் 2019
ஆன்லைன் வழியாக முதல்நிலைத் தேர்வு 28.12.2019 மற்றும் 29.12.2019
முதல்நிலைத் தேர்விற்கான முடிவுகள் வெளியாகும் நாள் ஜனவரி 2020



முக்கியத் தேர்விற்கான நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ய ஜனவரி 2020
ஆன்லைன் வழியாக முக்கியத் தேர்வு 25.01.2020
முக்கியத் தேர்விற்கான முடிவு வெளியாகும் நாள் பிப்ரவரி 2020
நேர்முகத் தேர்விற்கான அழைப்புவிடுக்கப்படும் நாள் பிப்ரவரி 2020
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் பிப்ரவரி 2020
பணி வழங்கப்படும் நாள் ஏப்ரல் 2020