Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, November 21, 2019

TNPSC Recruitment: 1141 காலிப் பணியிடங்கள்


தமிழ்நாடு கால்நடைத் துறையில் காலியாக உள்ள 1700-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 1141 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் வரும் டிசம்பர் 17ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.




நிர்வாகம் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

பணிகள் : கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர்

பணியிடம் : தமிழ்நாடு

காலிப் பணியிடங்கள் :
1141 நேரடி நியமன பணிகள்
கூடுதலாக 636 தற்காலிக அடிப்படை பணிகள்

கல்வித் தகுதி : கால்நடை மருத்துவத் துறையில் பி.வி.எஸ்சி., முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.




வயது வரம்பு : எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் எல்லை. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அதிகபட்ச வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.55,500 முதல் ரூ.1,75,700 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpscexams.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : பதிவு கட்டணம் ரூ.150, விண்ணப்பக் கட்டணம் ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் பிரவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.

தேர்வு மையம் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர்




தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வடிவத்திலான வாய்வழி சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முக்கியத் தேதிகள்:-
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி : 18.11.2019
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2019
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 19.12.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 23.02.2020




இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/Notifications/2019_32_notifn_vet_asst_surg.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.