Subscribe Us

Friday, December 13, 2019

பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாமல், இடைநின்ற மாணவர்கள், பிளஸ் 2 பொது தேர்வை எழுத, இன்று முதல், 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாமல், இடைநின்ற மாணவர்கள், பிளஸ் 2 பொது தேர்வை எழுத, இன்று முதல், 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சார்பில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
ஒவ்வொரு பள்ளியிலும், பிளஸ் 1 படித்து பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், பிளஸ் 2 படிக்காமல், இடையில் படிப்பை நிறுத்தியிருந்தால், அவர்களும் பிளஸ் 2 தேர்வை எழுதலாம். அந்த மாணவர்களின் விபரங்களை பதிவு செய்து, பள்ளி மாணவர்களுடன், பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத வைக்க வேண்டும்.




இதற்காக, இன்று முதல் வரும், 16ம் தேதிக்குள், அந்த மாணவர்கள், தங்கள் அசல் சான்றிதழ்களை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ்களை சமர்ப்பிக்காத மாணவர்கள், இந்த தேர்வை எழுத முடியாது. இந்த தகவலை, மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Popular Feed