Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, December 10, 2019

வரலாற்றில் இன்று 10.12.2019


டிசம்பர் 10 கிரிகோரியன் ஆண்டின் 344 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 345 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 21 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1041 – பைசண்டைன் பேரரசி சோயி தனது வளர்ப்பு மகனை ஐந்தாம் மைக்கல் என்ற பெயரில் பேரரசனாக்கினாள்.
1541 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மனைவியும் அரசியுமான கத்தரீனுடன் தகாத உறவு வைத்திருந்தமைக்காக தொமஸ் கல்பெப்பர்ம் பிரான்சிஸ் டெரெகம் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
1655 – யாழ்ப்பாண ஆளுநர் “அன்டோனியோ டி மெனேசா” மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் முகத்துவாரம் என்னும் இடத்தில் சிறை பிடிக்கப்பட்டார்.
1684 – ஐசாக் நியூட்டன் தனது புவியீர்ப்பு விதிகளின் கொள்கைகளில் எழுதிய கெப்லரின் விதிகளின் தீர்வுகள் ரோயல் சபையில் படிக்கப்பட்டது.
1807 – சென்னையில் நிலநடுக்கம் எற்பட்டது.
1817 – மிசிசிப்பி ஐக்கிய அமெரிக்காவின் 20வது மாநிலமாக இணைந்தது.
1868 – உலகின் முதலாவது சமிக்கை விளக்குகள் லண்டனில் நாடாளுமன்றுக்கு வெளியே நிறுவப்பட்டது.
1898 – ஸ்பெயின்-அமெரிக்கா போர் நிறுத்த உடன்பாடு பாரிசில் கைச்சாத்திடப்பட்டது.
1901 – முதலாவது நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.
1902 – அஸ்வான் அணை திறக்கப்பட்டது.
1902 – தாஸ்மேனியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.
1906 – அமெரிக்க அதிபர் தியொடோர் ரோசவெல்ட் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். இது ஒரு அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும்.




1936 – இங்கிலாந்தின் எட்டாம் எட்வேர்ட் மன்னன் முடி துறப்பதாக அறிவித்தான்.
1941 – இரண்டாம் உலகப் போர்: மலாயாவுக்குக் கிட்டவாக ஐக்கிய இராச்சியத்தின் இரண்டு கடற்படைக் கப்பல்கள் ஜப்பானியர்களால் மூழ்கடிக்கப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் பிலிப்பீன்சை அடைந்தனர்.
1948 – மனித உரிமைகள் குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை ஐநா பொதுச் சபை அறிவித்தது. இந்நாள் உலக மனித உரிமைகள் நாள் ஆக அறிவிக்கப்பட்டது.
1975 – ரஷ்யரான அந்திரேய் சாகரொவ் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
1981 – தெற்காசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்க பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐநா பொது அவை ஏற்றுக் கொண்டது.
1984 – தென்னாபிரிக்க கருப்பின மதகுரு டெஸ்மண்ட் டூட்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
1989 – மங்கோலியா கம்யூனிசத்தில் இருந்து மக்களாட்சிக்கு அமைதியாக மாற்றம் பெற்றது.
2006 – ஈழப்போர்: வாகரை, மாங்கேணியில் இலங்கைப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.




பிறப்புக்கள்

1804 – ஜேகோபி, ஜெர்மானிய கணிதமேதை. (இ. 1851)
1851 – மெல்வில் டியூவி – அமெரிக்கா. நூலக அறிவியலை வளர்த்தவர். (இ. 1931)
1878 – ராஜாஜி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவின் முதலாவது ஆளுநர் (இ. 1972)
1891 – நெல்லி சாக்ஸ், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர் (இ. 1970)
1934 – ஹவர்டு மார்டின் டெமின் – அமெரிக்கா. வைரசுகளைப் பற்றிய ஆராய்ச்சிக்காக 1975இல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். (இ. 1931)

இறப்புகள்

1896 – அல்பிரட் நோபல், சுவீடனைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் (பி. 1833)
1960 – சேர் சிற்றம்பலம் கார்டினர், இலங்கைத் தொழிலதிபர் (பி. 1899)
1987 – சுப்ரமண்ய ராஜு, தமிழ் எழுத்தாளர் (பி. 1948)
2001 – அசோக்குமார், இந்திய நடிகர் (பி. 1911)
2006 – ஆகுஸ்டோ பினோச்சே, சிலி நாட்டு சர்வாதிகாரி (பி. 1915)

சிறப்பு நாள்

மனித உரிமைகள் நாள்
நோபல் பரிசு அளிக்கும் வைபவம்
தாய்லாந்து – அரசியலமைப்பு நாள் (1932)