Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, December 23, 2019

அரையாண்டு தேர்வு இன்று நிறைவு ஜன., 1வரை விடுமுறை


பள்ளிகளிலும், அரையாண்டு தேர்வு இன்று முடிகிறது. நாளை முதல், ஜன., 1 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில் செயல்படும், அனைத்து வகை பள்ளிகளிலும், அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கடந்த, 11ல்அரையாண்டு தேர்வு துவங்கியது. 10ம் வகுப்பு மற்றும் இதர வகுப்புகளுக்கு, 13ல் துவங்கியது. அனைத்து வகுப்புகளுக்கும் பெரும்பாலான பாடங்களுக்கு தேர்வுகள்முடிந்துள்ளன.



மீதமுள்ள ஒரு பாடத்துக்கு மட்டும், இன்றுதேர்வு நடத்தப்படுகிறது; இன்றுடன் அனைத்து பாடத் தேர்வுகளும் முடிகின்றன. நாளை முதல், அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை துவங்குகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை ஒட்டி, ஜன., 1 வரை பள்ளிகள் இயங்காது. ஜன., 2ல், அனைத்து பள்ளிகளும் மீண்டும்திறக்கப்பட உள்ளன. அன்றைய நாளில் மூன்றாம் பருவ பாடப் புத்தகங்களை வழங்க, பள்ளி தலைமை ஆசிரியர்கள்அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.