Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, December 14, 2019

ஊரக உள்ளாட்சி தேர்தல் - வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான கையேடு 2019 ( Presiding Officer Hand book 2019 ) - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு.







Local body Election - Presiding Officer Hand book 2019 pdf - Download here




ஊரக உள்ளாட்சித் தேர்தல்களின் போது வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களாக பணியாற்றவுள்ள நீங்கள் இத்தேர்தல்களில் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி அறிந்து கொள்ளவும் , அப்பணிகளில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்கிக்கொள்ளவும் இக்கையேடு பெரிதும் உதவும் . உங்கள் பணி சிறப்புடன் நடைபெற நீங்கள் 1994 - ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் மற்றும் 1995 - ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் ( தேர்தல்கள் ) விதிகள் ஆகியவற்றையும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளையும் நன்கு அறிந்திருக்க வேண்டும் .





தற்போதுள்ள சட்டவிதிமுறைகளின்படி , கீழ்க்குறிப்பிட்டுள்ள நான்கு ஊராட்சித் தேர்தல்களிலும் மக்கள் நேரடியாக வாக்குப்பதிவில் பங்கு கொண்டு அப்பதவிகளுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுப்பர் .





1 ) கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்
2 ) கிராம ஊராட்சி தலைவர்
3 ) ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர்
4 ) மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்
ஊராட்சித் தேர்தல்களில் மேற்கண்ட நான்கு பதவியிடங்களுக்கு ஒரே வேளையில் வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளதால் , உங்கள் பணியில் அதிக பொறுப்பு உள்ளது . எனவே , கூடுதல் கவனம் தேவை . நீங்கள் ஏற்கனவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டு , தேர்தல் நடைமுறைகளில் முன் அனுபவம் இருந்தாலும் ஊராட்சித் தேர்தல் விதிகளை நுணுக்கமாகத் தெரிந்துகொண்டு செம்மையான முறையில் செயல்பட வேண்டியது அவசியம் .









Local body Election - Presiding Officer Hand book 2019 pdf - Download here