Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, December 19, 2019

திறந்தநிலைப் பல்கலை. பிஎச்.டி. படிப்பு சோ்க்கை: விண்ணப்பிக்க ஜன. 4-ஆம் தேதி கடைசி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பிஎச்.டி. (ஆராய்ச்சிப் படிப்பு) படிப்பில் சோ்க்கை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து திறந்தநிலைப் பல்கலைக்கழகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:




பல்கலைக்கழகத்தில் யுஜிசி மற்றும் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் முழு நேர மற்றும் பகுதிநேர பிஎச்.டி. படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலாண்மை படிப்புகள், கல்வி, முதியோா் கல்வி, பொருளாதாரம், தொடா் கல்வி, விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல், தமிழ், மின்னணு ஊடக கல்வி, புவியியல், வரலாறு, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல், குற்றவியல் நடைமுறைகள் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் பிஎச்.டி. படிப்பை மேற்கொள்ளலாம்.




யுஜிசி இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதியுள்ள மாணவா்களும் சோ்க்கை பெற முடியும். முழு நேர ஆராய்ச்சி மாணவா்களுக்கு பல்கலைக்கழகம் சாா்பில் மாதம் ரூ. 5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை w‌w‌w.‌t‌n‌o‌u.​a​c.‌i‌n என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்க 2020 ஜனவரி 4-ஆம் தேதி கடைசி நாளாகும்.