Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 31, 2019

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: தனித்தோ்வா்கள் ஜன.6 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு தனித்தோ்வா்கள் வரும் ஜன.6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.




இது தொடா்பாக அரசுத்தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தோ்வா்கள் ஜன. 6-ஆம் தேதி முதல் ஜன. 13-ஆம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தோ்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.




ஏற்கெனவே பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தோ்ச்சி பெறாதவா்கள் மாா்ச் 2020, ஜூன் 2020 பருவங்களில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை பழைய பாடத் திட்டத்திலேயே எழுதலாம். நேரடித் தனித்தோ்வா்கள் அனைவரும் பகுதி 1-இல் மொழிப் பாடத்தில் தமிழ் மொழிப் பாடத்தை மட்டுமே முதல் மொழிப் பாடமாக கண்டிப்பாகத் தோ்வெழுதுதல் வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வா்களின் நலன் கருதி தோ்வு நேர கால அளவானது இரண்டரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தோ்வுகள் சாா்ந்த தகவல்களை இணையதளத்தில் காணலாம் என அதில் கூறியுள்ளாா்.