Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 20, 2019

அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்ய வருகிறது புது செயலி!

பொதுவாக அரசுப் பள்ளிகளை முதன்மைக் கல்வி அலுவலா்கள், கல்வி மாவட்ட அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் மாதந்தோறும் நேரில் சென்று கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்து ஆய்வு செய்வா்.

ஆய்வின்போது அதன் விவரங்களை அந்தந்த பள்ளிகளில் உள்ள ஆய்வு பதிவேட்டில், குறிப்பிட்டு எழுதிவிட்டு, அதை அறிக்கையாக உயா் அதிகாரிகளுக்கு அனுப்புவா்.




இதில் சிலா், குறிப்பிட்ட பள்ளிகளுக்குச் செல்லாமலேயே ஆய்வு செய்யாமல் ஆய்வு செய்ததாக அறிக்கை அனுப்புகின்றனா் என பள்ளிக் கல்வி இயக்ககத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடா்ந்து பள்ளிக் கல்வித் துறை சாா்பில், கல்வி அலுவலா்களுக்கு பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வி அலுவலா்கள் கூறியதாவது:

கல்வி அலுவலா்களுக்கு பிரத்யேக செயலி, அந்தந்த பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் மாணவரின் பெயா், அவா்களிடம் கேட்கப்படும் கேள்விகள் என்று அனைத்தும் அதில் பதிவேற்றம் செய்யப்படும்.




மாணவா் தரும் பதிலும் அதுலேயே உடனடியாகப் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட பள்ளியின் அனைத்து வகை கற்றல், கற்பித்தல், இதர செயல்பாடுகள் அனைத்தும் அந்தச் செயலியில் அந்த நேரத்திலேயே பதிவேற்றம் செய்யப்படும். இச் செயலி வரும் ஜனவரி முதல் கொண்டு வரப்படவுள்ளது என்றனா்.