Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 31, 2019

வாட்ஸப் அப்டேட்ஸ்



இன்று வாட்ஸப்பைத் திறந்து பார்க்காமல் நாட்கள் முடிவதில்லை. பயனாளிகளின் வசதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் சில அப்டேட்களை அவ்வப்போது வாட்ஸப் செய்து வருகிறது. அதில் இது லேட்டஸ்ட்.

கால் வெய்ட்டிங்

இனி மொபைல் போன் கால் போல கால் வெய்ட்டிங் வசதியை வாட்ஸப் கால்களிலும் பயன்படுத்தலாம். இதுவரை இரண்டாவது லைனில் வரும் போன் கால்களை ரிஜெக்ட் செய்துவிடும் வகையில் வாட்ஸப் இயங்கிவந்தது. ஒரே நேரத்தில் ஒரு கால் மட்டுமே. ஆனால், இனி ஒரு நபருடன் வாட்ஸப்பில் பேசிக்கொண்டிருக்கும்போது, இரண்டாவதாக ஃபோன் செய்பவர் யார் என்பதை தெரிந்துகொள்ளலாம். ஆனால், மொபைல் கால் போல 'ஹோல்டு' செய்ய முடியாது என்பது மட்டுமே இதில் குறை. இதையும் வரும் காலங்களில் வாட்ஸப் சரி செய்துவிடும் என்று நம்பலாம். ஒரு காலத்தில் கான்ஃபரன்ஸ் காலே எட்டாக் கனியாக இருந்தது. இது மாதிரி போன் காலில் உள்ள வசதிகளையும் வாட்ஸப் மேற்கொள்ளும். இதற்கு முதல் அடி தான் கால் வெயிட்டிங்.




குரூப்

வாட்ஸப் பயனாளிகளை அச்சுறுத்தும் முக்கிய விசயமே ஏதாவது ஒரு குரூப்பில் நம் அனுமதியில்லாமல் இணைத்துவிட்டு வேடிக்கை பார்ப்பது மட்டும்தான். ஒரு நாளைக்கு தேவையில்லாமல் 100 குரூப்களில் இணைக்கப்படும் பயனாளிகள் கூட இருக்கின்றனர். அந்த மனக்குமுறல்களை முகநூல் பதிவுகளாகவும் நாம் பார்க்கலாம். அப்படி நம்மை குரூப்பில் இணைத்துவிடுபவர்கள் நம் நண்பர்களாகவும், உறவினர்களாகவும் கூட இருப்பது இதில் இன்னொரு பிரச்னை. குரூப்பில் இணைத்துவிடும் நெருங்கிய நண்பர்களைக் கூட பிளாக் செய்யும் சூழலும் இங்கே நிலவுகிறது. இனி இந்த தர்மசங்கடமான நிலை ஏற்படாது. ஆம்; இதற்காகவே புதிதாக ஒரு அப்டேட்டை செய்து அசத்தியிருக்கிறது வாட்ஸப்.




கைரேகை பாதுகாப்பு

இன்று ஃபிங்கர் பிரின்ட்டைப் பயன்படுத்தி திறக்கும் ஸ்மார்ட்போன்கள் அதிகம். டிஜிட்டல் கில்லாடிகள் உங்கள் ஸ்மார்ட் போனை வைத்தே நீங்கள் எந்த விரலின் ரேகையைப் பயன்படுத்துகிறீர்கள் என்று கண்டுபிடித்துவிடுவார்கள். பொதுவாக கட்டைவிரலைத்தான் அதிகமாக ஃபிங்கர் பிரின்டாகப் பயன்படுத்துகின்றனர். இந்த ஃபிங்கர் பிரின்ட்டைக் கூட போலியாக உருவாக்கி உங்களின் ஸ்மார்ட்போனுக்குள் நுழைந்து தகவல்களைத் திருடும் வித்தைக்காரர்கள் அதிகமாகிவிட்டனர்.




ஸ்மார்ட்போனைத் திறப்பது மாதிரியே வாட்ஸப்பையும் திறக்க ஃபிங்கர் பிரின்ட் வசதியைக் கொண்டு வந்திருக்கிறது வாட்ஸப். இதற்கு நீங்கள் எந்த விரலை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். இதை ஆக்டிவேட் செய்ய வாட்ஸப் அப்ளிகேஷனுக்குள் Settings > Account > Privacy > Groups என்று வரிசையாக Settings > Account > Privacy > Fingerprint lock என்ற முறைப்படி சென்று Enable Unlock with fingerprint என்ற ஆப்ஷனை க்ளிக் செய்வதன் மூலம் உங்கள் விருப்பமான கைரேகையைப் பயன்படுத்தி வாட்ஸப்பை பாதுகாத்துக்கொள்ளலாம்.