Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, December 30, 2019

'நீட்' நுழைவு தேர்வுக்கான பதிவு நாளையுடன் நிறைவு


சென்னை:மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நாளையுடன் முடிகிறது. விண்ணப்ப அவகாசம் நீட்டிக்கப்படுமா என, மாணவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.நாடு முழுதும், பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும், பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, மத்திய அரசின், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.அதேபோல, ஆயுஷ் வகை படிப்புகளான, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம், ஹோமியோபதி படிப்புகளில் சேரவும், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.



இந்த ஆண்டு, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், வரும் கல்வியாண்டில், மருத்துவ படிப்பில் சேருவதற்கு, மே, 3ல், நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுதும் ஒரே நாளில், ஒரே வகையான வினாத்தாளுடன் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு, ஆங்கிலம், ஹிந்தி, உருது, தமிழ், கன்னடம், குஜராத்தி, ஒடியா, அசாமி, மராத்தி உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் வினாத்தாள் தயாரிக்கப்படும் என, அறிவிக்கப் பட்டுள்ளது.



தேர்வுக்கான 'ஆன் லைன்' விண்ணப்ப பதிவு, கடந்த, 2ல் துவங்கியது. நாளை நள்ளிரவு, 11:59 மணியுடன் பதிவு நிறைவு பெறுகிறது. நேற்று வரை விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் நீட்டிக்கப்படவில்லை. பதிவுக்கான அவகாசம் நீட்டிக்கப்படுமா என, மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்து, இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.