Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, December 2, 2019

வீட்டு கடனை திரும்ப செலுத்த அரசு ஊழியர்களுக்கு புதிய விதி!

அரசு ஊழியர்கள், வீடு கட்டுவதற்காகவாங்கிய முன்பணத்தை, அரசுக்கு மொத்தமாக திருப்பி செலுத்த வசதியாக, புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில், அரசு ஊழியர்கள், சொந்தமாக வீடு கட்ட, வங்கிகளில் கடன் பெறுவதற்கு பதில், அரசே குறிப்பிட்ட தொகையை, முன்பணமாக வழங்குகிறது. தற்போதைய நிலவரப்படி, 40 லட்சம் ரூபாய் வரை, முன்பணமாக பெற முடியும். இத்தொகை, மாத தவணையாக, சம்பளத்தில் பிடித்தம் செய்யப் படும். இதற்கு, குறைந்த பட்ச வட்டியும் விதிக்கப் படும்.




தவணை காலம் முடிவதற்குள், அசல் தொகையை, மொத்தமாக செலுத்த விரும்பும், அரசு ஊழியர்களுக்கு, சரியான விதிமுறைகள் இல்லை. அசல் தொகையை, மொத்தமாக செலுத்த தேவையான நிதி ஆதாரம் பற்றி, அரசுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இதில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வாக, புதிய விதிமுறைகளை, அரசு பிறப்பித்துள்ளது.

 வீட்டுக்கடன் முன் பணத்தை, முன்னதா கவே திருப்பி செலுத்த விரும்புவோர், அதற்கான நிதி, எவ்வழியில் திரட்டப்பட்டது என்பதற் கான ஆதாரத்துடன், தங்கள் துறையின் மேலதிகாரிக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும்

 இந்த விண்ணப்பம், அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என, அந்த மேலதிகாரி ஆராய வேண்டும்




 துறை மேலதிகாரியின் அனுமதிக்கு பின், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர், அசல் தொகையை, எந்த அதிகாரியிடம் செலுத்த வேண்டுமோ, அவரிடம் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

 அப்போது, துறை அதிகாரி அனுமதி கொடுத்துள்ள விபரத்தை, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கும், தலைமை கணக்காயருக்கும் தெரிவிக்க வேண்டும். இதன் பிறகே, பணத்தை செலுத்த முடியும்

 பணத்தை செலுத்தியதும், அதுகுறித்த ஆவணங்களை, தலைமை கணக்காயருக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.