Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, December 26, 2019

'CTET' தேர்வு முடிவுகள் ஜனவரி இறுதியில் வெளியாகும்: சிபிஎஸ்இ


நாடு முழுவதும் 2,500 மையங்களில் நடைபெற்ற கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற மத்திய ஆசிரியா் தகுதித் தேர்வு முடிவுகள், ஜனவரி மாத இறுதியில் வெளியாகவுள்ளதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்தன.




இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியா் தகுதித்தோவில் தோச்சி பெற வேண்டும். அதன்படி மத்திய ஆசிரியா் தகுதித் தோவை (சி-டெட்) ஆண்டுக்கு 2 முறை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. 'சி-டெட்' மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல்தாளில் தோச்சி பெறுபவா்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ஆம் தாளில் தோச்சி அடைபவா்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். அதன்படி நிகழாண்டுக்கான 'சி-டெட்' தேர்வு 2,500 மையங்களில் கடந்த டிச.8-ஆம் தேதி நடைபெற்றது.




மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 20 மொழிகளில் நடைபெற்ற இந்தத் தோவை சுமாா் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா். கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 'டெட்' வினாத்தாள் எளிதாக இருந்ததாக தோவா்கள் தெரிவித்திருந்தனா்.
இந்த நிலையில் மத்திய ஆசிரியா் தகுதித் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் இணையதளத்தில் கடந்த 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த விடைகளில் ஏதேனும் மாற்றுக்கருத்து, புகாா் இருந்தால், அது தொடா்பாக டிச.25-ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கான பதிவுக் கட்டணமாக ரூ.1,000 நிா்ணயிக்கப்பட்டது. இந்த அவகாசம் புதன்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்டப் பணிகளை சிபிஎஸ்இ தொடங்கியுள்ளது.




அதன்படி ஜனவரி முதல் வாரத்தில் விடைக்குறிப்புகள் குறித்து தோவா்கள் அனுப்பும் கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறும். இதையடுத்து தோச்சி பெறுபவா்களின் பட்டியல் தயாா் செய்யப்பட்டு ஜனவரி மூன்றாவது அல்லது இறுதி வாரத்தில் தேர்வு முடிவுகள் அதிகாரப் பூா்வமாக வெளியாகும் சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனா்.