Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 20, 2019

FASTag பற்றிய 10 சிறப்பு அம்சங்கள்

1. FASTagகளை எங்கே பெறுவது ?அனைத்து வங்கிகளின் இணையதளங்கள், அமேசான், பிளிப்காட், பேடிஎம் மால் ஆகியவற்றில் FASTag களை பெற முடியும். இது தவிர வங்கிகளின் விற்பனை அலுவலகங்கள், சுங்கச்சாவடிகள், சேவை மையங்கள், சுங்கச்சாவடி கட்டுப்பாட்டு மையங்கள், சில பெட்ரோல் நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலை மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றிலும் பெற முடியும்.




2. தேவைப்படும் ஆவணங்கள் : FASTag களை வங்கி கணக்குகளுடன் இணைக்க வேண்டும். இதனால் கேஒய்சி (KYC) ஆவணங்கள் அவசியம். ஆர்சி (registration certifacate) பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போதே, FASTag விண்ணப்பத்தையும் அளிக்க வேண்டும். அத்துடன் அடையாள ஆவணங்களும் சமர்பிக்கப்பட வேண்டும்.

3. FASTag க்கு ஒரு முறைக்கு எவ்வளவு செலுத்த வேண்டும் ?Tag கிற்கான விலை ரூ.100, பிணைத் தொகையாக ரூ.200 செலுத்த வேண்டும். இது ஒருமுறைக்கான தொகை மட்டுமே. இந்த தொகை உங்களின் கணக்கில் இருந்து கழிக்கப்பட்ட பிறகு, மீண்டும் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சமாக ரூ.200 க்கு டாப்-அப் செய்ய வேண்டும்.
4. எப்படி டாப்-அப் செய்வது?கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, NEFT/RTGS அல்லது நெட் பேங்கிங், UPI, காசோலை உள்ளிட்ட வழிகளில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். உங்களின் வங்கி இணையதளத்தில் இதனை சரி பார்த்துக் கொள்ளலாம். இதே போன்று My FASTag என்ற ஆப்பை டவுன்லோடு செய்து, அதனை FASTag இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குடன் நேரடியாக இணைத்தோ அல்லது வாலட் உருவாக்கியோ ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
5. FASTag செல்லுபடியாவதற்கான காலக்கெடு என்ன?FASTag க்கிற்கு அன்லிமிடெட் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. வங்கி கணக்கில் பணம் குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகிறது.




6. பழைய FASTag ஐ தொடர்ந்து பயன்படுத்த முடியுமா?2017 ம் ஆண்டிற்கு பிறகு வாங்கப்பட்ட புதிய வாகனங்களுக்கு அதன் பிறகு இணைக்கப்பட்ட FASTag செல்லும். உரிய வங்கியில் விபரங்களை அளித்து, புதுப்பித்துக் கொள்ளலாம். ஒருவேளை அதனை தவற விட்டிருந்தால் தேசிய நெடுஞ்சாலை உதவி எண்களை தொடர்பு கொண்டு மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்.

7. சுங்கச்சாவடிகளில் எவ்வளவு செலுத்தினீர்கள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது?ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடி கட்டணம் உங்கள் கணக்கில் இருந்து கழிக்கப்படும் போதும், நீங்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அத்துடன் உங்களின் FASTag கணக்கில் மீதமுள்ள தொகை குறித்த தகவலும் தெரிவிக்கப்படும்.




8. நீண்ட பயணம் மேற்கொள்ளும் போது குறைவான தொகை இருந்தால் என்ன செய்வது?உங்களின் வங்கி உதவி எண் அல்லது அதற்கான இணையத்தை தொடர்பு கொண்டு விபரங்கள் அல்லது உதவி பெற முடியும்.

9. ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றிக் கொள்ள முடியுமா?தற்போது அத்தகைய வசதி கொண்டு வரப்படவில்லை. புதிய வங்கி கணக்குடன் உங்களின் FASTag ஐ இணைய விரும்பினால், ஏற்கனவே பயன்படுத்திய FASTag ஐ முற்றிலுமாக ரத்து செய்து விட்டு, புதிய FASTag ஐ வாங்கி, புதிய கணக்குடன் இணைக்க வேண்டும்.




10. உங்களின் உறவினர் பெயரில் பதிவு செய்யப்பட்ட காரை நீங்கள் ஓட்டினால் என்ன செய்வது?ஆர்சி விபரங்களை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். உங்களின் மொபைல் எண் முதல் வங்கி கணக்கு வரை அத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.