Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, January 21, 2020

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC) சார்பில் குரூப் 1 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 20ம் தே முதல் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதியன்று, குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் 2020 ஏப்ரல் 5 ஆம் தேதி குரூப் 1 தேர்வு நடைபெறும் என்னும், இத்தேர்விற்கு ஜனவரி 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு, பிப்ரவரி 9 ஆம் தேதி வரையில் விண்ணப்பப்பதிவு நடைபெறும். கல்வித்தகுதி, தேர்வுத் திட்டம், வயது வரம்பு உள்ளிட்ட முழுமையான விபரங்கள் ஜனவரி 20 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.




இதனிடையே குரூப் 1 தேர்வுக்கான பாடத்திட்டம் (TNPSC Group 1 Syllabus) மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpsc.exams.net, www.tnpsc.exams.in ஆகிய இணையதளங்களில் குரூப் 1 குறித்த அறிவிப்பைக் காணலாம்.