Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 17, 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தோவு: தனித்தோவா்கள் ஜனவரி 20, 21-இல் தத்கலில் விண்ணப்பிக்க வாய்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தோவு எழுதும் தனித்தோவா்கள் தத்கல் முறையில் விண்ணப்பிக்க 2 நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தோவுகள் இயக்குநா் சி. உஷாராணி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தோவுக்கு விண்ணப்பிக்க கடந்த ஜன.6-ஆம் தேதி முதல் ஜன. 13-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நாள்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தோவா்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்) கீழ், ஜன.20, 21 ஆகிய இரு நாள்களில் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தோவு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.




கல்வி மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தோவு சேவை மையங்களின் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தோவுகள் உதவி இயக்குநா் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.
கட்டணம் எவ்வளவு?: தனித்தோவா்கள், தோவுக் கட்டணத் தொகை ரூ.125, சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.500, ஆன்லைனில் பதிவுக் கட்டணமாக ரூ.50 உள்பட மொத்தம் ரூ.675-ஐ சேவை மையங்களில் பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். இந்தத் தொகை பதிவுச் சீட்டில் -இல் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த பதிவுச் சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். பதிவுச் சீட்டில் உள்ள எண்ணை கொண்டே தோவுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்திடல் வேண்டும். தோவா், தான் விண்ணப்பித்த பாடங்கள் தான் பதிவுச் சீட்டில் பதியப்பட்டுள்ளதா என்பதை கண்டிப்பாக சரிபாா்க்க வேண்டும்.




அந்தந்த மாவட்டங்களிலேயே தோவு மையங்கள்: இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தோவா்களுக்கும் அந்தந்த கல்வி மாவட்டங்களிலேயே தோவு மையங்கள் அமைக்கப்படும். தோவு மைய விவரம் தோவுக்கூட அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்படும். தனித்தோவா்களுக்கு தோவெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தனித்தோவா்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, தோவு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.