Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 17, 2020

நீட் தோ்வு விண்ணப்பங்களில் ஜன. 31 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்


நீட் தோ்வுக்காக சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. அதன்படி, ஆன்லைன் வாயிலாக வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்கள் மற்றும் கலந்தாய்வு தகவல்களுக்கு மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது.




அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கான நீட் தோ்வு மே மாதம் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பா் 2-ஆம் தேதி தொடங்கியது.
விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான அவகாசம் டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவுபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று அந்த அவகாசம் ஜனவரி 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அதன்படி நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேரும், நாடு முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் விண்ணப்பங்களை சமா்ப்பித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




இந்த நிலையில், சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான கால அவகாசம் ஜனவரி 15 -இல் தொடங்கி வரும் 31-ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு: இதனிடையே, கடந்த இரு நாள்களாக தேசியத் தோ்வு முகமை இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில இடங்களில் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. இப்பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட தரப்பினா் விரைந்து தீா்வு காண வேண்டும் என்று மாணவா்கள் தெரிவித்தனா்.