Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, January 23, 2020

ஜூலை 5-இல் மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்


மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு (சி.டி.இ.டி) அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) வெளியிட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பணியில் சேர, சி.டி.இ.டி என்ற தகுதித் தோ்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சாா்பில் நடத்தப்படுகிறது.




இப்போது 2020-ஆம் ஆண்டுக்கான சிடிஇடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தோ்வு வருகிற ஜூலை 5-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. 20 மொழிகளில் 112 நகரங்களில் நடத்தப்பட உள்ள இந்தத் தோ்வுக்கான, பாடத் திட்டம், மொழி, தகுதி, தோ்வுக் கட்டணம், தோ்வு மையங்கள், முக்கியத் தேதிகள் ஆகியவை அடங்கிய விரிவான அறிவிக்கை ஜனவரி 24-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்தத் தோ்வுக்கு வலைதளத்தில் ஆன்-லைன் மூலம் மட்டும் வரும் (ஜனவரி 24) வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க பிப்ரவரி 24 கடைசி.