Wednesday, January 29, 2020

அரசு பள்ளி மாணவர்களுக்கான ATSL 2020 முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு.

Quality Intervention ( Secondary ) என்ற தலைப்பின் கீழ் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு Aptitude Test at School Level நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . இக்கல்வி ஆண்டில் திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ள 8 , 51 , 999 மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு நடத்தப்பட உள்ளது .



அரசுஉயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இறுதித் தேர்விற்கு முன்பாக ( Pilot Test ) முன் மாதிரி நாட்டமறித் தேர்வு 8 மண்டலங்களில் ( திருவள்ளூர் , ஈரோடு , கடலூர் , சிவகங்கை , கிருஷ்ணகிரி , நாகை , திண்டுக்கல் , திருநெல்வேலி ) ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் 08 . 01 . 2020 நடத்தப்பட்டது . இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் பயிற்சிக்காக TNTP / EMIS இணையதளத்தில் மாதிரி வினாத்தாட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது .

ATSL 2020 முதன்மைத் தேர்வு ஜனவரி 30 , 31 மற்றும் பிப்ரவரி 1 ந் தேதி ஆகிய மூன்று நாட்களில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படவுள்ளது .




தேர்வு நேரம்

* Session 1 : காலை 9 . 00 மணி முதல் 1 . 00 மணி வரை
* Session II : பிற்பகல் 2 . 00 மணி முதல் 6 . 00 மணி வரை

இத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து குழுக்கள் அமைத்து செயல்பட ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது .

மாணவர்கள் பள்ளியிலேயே தேர்வு எழுதுவதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் இணையதள வசதியுடன் கணினி வளங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் . அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அவ்வப்போது இதுகுறித்து வழங்கப்படும் அறிவுரைகளைக் கவனத்தில் கொண்டு தேர்வை நல்ல முறையில் நடத்தி முடிக்கத் தேவையான நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் .

Recent Story

Featured News

Labels

1-5 10 வகுப்பு 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் Android Apps ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BOOKS CBSE BOOKS CBSE EXAMS CCE COLLEGE LINKS COMPUTER COURT ORDER CSAT CSIR CTET Current Affairs FONTS Forms G K G.Os GATE HALL TICKET ICT IMPORTANT LINKS INCOME TAX JEE LAB ASSISTANT LESSON PLAN NAS NEET NET NEWS NMMS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS POLICE POSTAL QR CODE VIDEOS RAILWAY RESULT RMSA RRB RTI LETTERS SET SLAS SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TNPSC Tr TRB TRB-TET-NET UPSC VAO VIDEO VIDEO STORIES YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரியது அறிவியியல் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் கட்டுரை கதைகள் கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை சட்டம் சிற்றிதழ் தமிழ் நூல்கள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தேர்வு தொழில்நுட்பச் செய்திகள் நீதிக் கதைகள் பொது பொதுச் செய்திகள் மருத்துவம் யோகாசனம் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜோதிடம்
Back To Top