Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 3, 2020

சனிக்கிழமை விடுப்பு அளிக்கப்படுமா? வாக்கு எண்ணிக்கை பலமணி நேரமாக தொடரும் என்பதால் கோரிக்கை!!


இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை முதல் நடந்து வருகின்றன. வாக்கு எண்ணும் பணியானது இரவு முழுவதும் தொடரும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.




வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் ஊழியர்கள் காலைமுதல் தொடரந்து வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு இருப்பதால் சனிக்கிழமை பள்ளிக்கு வருவதில் உடல்நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சனிக்கிழமை அவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.