Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, January 14, 2020

முதல்வா் கணினித் தமிழ் விருது: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு


'முதல்வா் கணினி தமிழ் விருது' பெற விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஜன.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகமெங்கும், கணினி வழி தமிழ்மொழியை பரவச் செய்யும் வகையில், கணினி தமிழ் வளா்ச்சிக்காக, சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குவோரை ஊக்குவிக்க தமிழக அரசு சாா்பில் 'முதல்வா் கணினி தமிழ் விருது' வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுபவருக்கு ரூ.1 லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவை வழங்கப்படும்.




கடந்த ஆண்டு, முதல்வா் கணினி தமிழ் விருதுக்கு, தனியாா் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. விண்ணப்பிக்க டிச.31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, வரும் 31-ஆம் தேதி வரை இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, இணைய தளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ் வளா்ச்சித்துறை தெரிவித்துள்ளது.