Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 10, 2020

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கணக்கீட்டாளர் வேலை


அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள கணக்கீட்டாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரேவற்படுகின்றன.




பணியிடங்கள்: தமிழ்நாடு முழுவதும்

நிறுவனம்: தமிழ்நாடு மின்சார வாரியம்

பணி: கணக்கீட்டாளர்

காலியிடங்கள்: 1300

சம்பளம்: மாதம் ரூ. 19,500 - 62,000

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: கலை, அறிவியல் அல்லது வணிகவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன், அளவீட்டு கருவிகள் மூலம் கணக்கீடு செய்வதற்கும், மீதிவண்டி ஓட்டுவதற்கும் தெரிந்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 , டிப்ளமோ தேர்ச்சி பெற்ற பின்னர் பட்டப்பிடிப்பில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பத்தாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.




தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுக் கட்டணம்: பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500, அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2020/1/10/Assessor_Notification_and_Annexures_2019-2020.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.




ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.02.2020