Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 23, 2020

DEE - 26.01.2020 ஞாயிறு காலை 09 . 00 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தினவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட இயக்குநர் உத்தரவு.


* 26.01.2020 ஞாயிறு அன்று குடியரசு தினவிழாவினை மகிழ்ச்சியும் , எழுச்சியும் மிக்க விழாவாகக் கொண்டாடுதல் வேண்டும் .

* பள்ளி வளாகத்தை வண்ணக் காகிதங்களாலும் , மலர்களாலும் நன்கு அலங்கரித்தல் வேண்டும் .

* தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 26.01.2020 ஞாயிறு காலை 09 . 00 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தினவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் .




* கிராமக் கல்விக் குழு உறுப்பினர்கள் , பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் , பள்ளி புரவலர்கள் , சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்கு பெறச் செய்தல் வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.

* மேலும் தேசியக் கொடியினை காட்சிப்படுத்தும் போதும் , பயன்படுத்தும் போதும் நெகிழித் தாள்களில் ( Plastics ) உள்ள கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது எனவும் , தேசியக் கொடிகளை பயன்படுத்துவது குறித்து பிரிவு IX of Flag Code of India 2002 - ன்படி செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




* மேற்கண்ட விவரங்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி குடியரசு தினவிழாவினை அனைத்துப் பள்ளிகளிலும் தவறாமல் சிறப்பாகக் கொண்டாடிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

- தொடக்கக் கல்வி இயக்குநர்