Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 31, 2020

ஆசிரியர் தேர்வில் இட ஒதுக்கீடு விதிமீறலை எதிர்த்து Trb மேல்முறையீடு


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீடு விதிகள் மீறப்பட்டிருப்பதை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் , அதை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மேல்முறையீடு செய்வதற்கு பாமக நிறுவ னர் டாக்டர் ச . ராமதாஸ் கண்டனம் தெரி வித்துள்ளார் . | இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை அரசுப் பள்ளிகளுக்கு 2 , 144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வ தற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளுக் கான முடிவுகள் இரு கட்டங்களாக வெளி யிடப்பட்டன .




முதல்கட்டமாக வெளியிடப்பட்ட முடிவுகளில் வேதியியல்பாட ஆசிரியர்கள் தேர்வில் இடஒதுக்கீட்டு முறை சரியாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் , அப் பட்டியலை ரத்து செய்துவிட்டு , இடஒதுக் கீட்டு விதிகளுக்கு உட்பட்டு புதிய பட்டி யலை தயாரித்து வெளியிடும்படியும் பாமக வலியுறுத்தியிருந்தது . அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட முடிவுகளில் தமிழ் , வர லாறு , பொருளாதாரம் ஆகிய பாடங்களுக் கானதேர்வு முடிவுகளிலும் அதேபோன்று இட ஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டிருந் ததை பாமக அம்பலப்படுத்தியது . இதனிடையே வேதியியல் பாட ஆசி ரியர் தேர்வில் , பொதுப்பிரிவில் வெற்றி பெற்ற மிகவும் பிற்படுத் தப்பட்ட மாணவர்க ளைப் பொதுப்பிரிவில் சேர்க்காமல் , இடஒதுக் கீட்டுப் பிரிவில் சேர்த் ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக் குகள் தொடரப்பட்டன .




அந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங் கடேசன் , ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை என்று கருத்து தெரிவித்தது மட்டுமின்றி , வேதியியல் பாட ஆசிரியர் தேர்வுப்பட்டியலை ரத்து செய்து விட்டு , இட ஒதுக்கீட்டு விதிகளை முழுமை யாக கடைப்பிடித்து புதிய தேர்வுப் பட்டி யலை அடுத்த இரு வாரங்களுக்குள் தயா ரித்து வெளியிட வேண்டும் என்று ஆணை யிட்டார் .
சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட இரு வார அவகாசம் கடந்த 23 - ஆம் தேதி யுடன் முடிவடைந்து விட்டது . ஆனா லும் , ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய பட்டி யலை தயாரித்து வெளியிடவில்லை . அதற்கு மாறாக , உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதா கத் தெரிய வந்துள்ளது . இது சமூக நீதிக்கு எதிரானது என்று ராமதாஸ் கூறியுள்ளார் .