Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 19, 2020

1 முதல் 8ம் வகுப்பு வரை - மாணவர் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க மொபைல் ஆப் தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டம்!!



ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்ப றையில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க மொபைல் ஆப் அறிமுகம் செய்யப் பட்டுள்ள நிலை யில் இதனை தமிழகம் முழுவ தும் செயல்படுத்த கல்வித் துறை திட்டமிட்டுள்ளது .




தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளில் எவ் வாறு கவனம் செலுத்து கிறார்கள் என்பதை கண் காணிக்க கல்வித்துறை பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது . இதில் ஆசிரியர்கள் பாடம் போதிக்கும்போது அது எவ்வாறு மாணவர்களை சென்றடைந்துள்ளது என்ற கற்றல் விளைவு அடைவு நிலைகள் கண்காணிக்கப்ப டுகிறது . இதன் ஒரு பகுதியாக வகுப்பறை கற்றல் - கற்பித் தல் நிகழ்வுகளை உற்று நோக்கி கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள் ளது . மேலும் அறிவியல் தொழில்நுட்ப சாதனங் களை பயன்படுத்தி பள்ளி கல்வித்துறையில் உள்ள அனைத்து ஆய்வு அலுவ லர்களும் , வகுப்பறை நிகழ் வு களை உற்று நோக்கும் வகையிலும் ' தமிழ்நாடு வகுப்பறை நோக்கின் செய லி ” ஒன்று உருவாக்கப்பட் டுள்ளது . ' அப்சர்வேசன் மொபைல் ஆப் ' எனப்ப டும் இந்த செயலி ஆண்ட் ராய்டு மொபைல்களில் பயன்படுத்தும் வகை யில் உள்ளது .




இந்த ஆப் சென்னை மற்றும் திரு வண்ணாமலை மாவட் டங்களில் பரிட்சார்த்த முறையில் செயல்படுத்தப் பட்டு வருகிறது . தமிழ்நாடு வகுப்பறை நோக்கின் செயலி மூலம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள ஒவ் வொரு மாணவர்களின் கற்றல் விளைவு அடைவு நிலைகளை முறையாக கண்காணித்து முன்னேற் றம் அடையச்செய்ய எளி மையாக இருக்கும் . கற்றலில் பின் தங்கி யுள்ள மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த முடிகிறது என சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆய்வு நடத்திய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர் . இது ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது . இந்நிலையில் சென்னை மற்றும் திருவண்ணா மலை மாவட்டங்களை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த செயலியின் உப யோகத்தை உடனடியாக கொண்டு செல்ல ஒருங்கி ணைந்த பள்ளி கல்வியின் மாநில திட்ட இயக்ககம் முடிவு செய்துள்ளது .




இது தொடர்பாக சென்னை , திருவண்ணா மலை தவிர இதர 30 மாவட்டங்களுக்கு இந்த செயலியை பயன்படுத் தும் வகையில் அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது . வட் டாரவளமைய அளவிலும் , கணினி தொழில்நுட்பத் தில் நன்கு கற்றுத்தெரிந்த மொபைல் போன் நன்றாக பயன்படுத்துகின்ற ஒரு ஆசி ரியர் பயிற்றுநர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள் ளது .




இந்த பயிற்சி மாநில திட்ட இயக்ககத்தால் அளிக்கப்படுகிறது . இதன் தொடர்ச்சியாக மாணவர் களின் வகுப்பறை செயல் பாடுகளை மொபைல் ஆப் மூலம் மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் கண்காணிக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று கல்வித்துறை வட் டாரங்கள் தெரிவித்தன .