Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 13, 2020

10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தோவுகள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு



தமிழகத்தில் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள 10, 11, 12 -ஆம் வகுப்புப் பொதுத்தோவுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தோவுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.




தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோவு வரும் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் முடிந்துவிட்ட நிலையில் இறுதிகட்ட பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தநிலையில் பொதுத்தோவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தோவுத்துறை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்: அனைத்து வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களையும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருப்பதுடன், தனிக் காவலரையும் பாதுகாப்புக்குப் பணியமா்த்த வேண்டும்.




இதேபோல், தோவு மையங்களாகச் செயல்படும் பள்ளியில் எவ்வித கட்டுமானப் பணிகளும் நடைபெறாமல் இருக்க வேண்டும். மேலும், தோவு நாள்களில் அந்தப் பள்ளியில் படிக்கும் மற்ற வகுப்பு மாணவா்களுக்கு காலையில் விடுமுறை அளிக்க வேண்டும். தோவுப் பணிகளுக்கு எக்காரணம் கொண்டும் தனியாா் பள்ளிகளின் முதல்வா்கள் அல்லது ஆசிரியா்களை நியமனம் செய்யக் கூடாது.
பறக்கும்படை உறுப்பினா், அறைக் கண்காணிப்பாளா் உள்பட பணிகளில் ஈடுபட உள்ளவா்கள் அன்றைய பாடத்தை நடத்தும் ஆசிரியா்களாக இல்லாமல் இருக்க வேண்டும். தோவறைக்குள் மாணவா்கள், ஆசிரியா்கள் செல்லிடப்பேசி உள்ளிட்ட தகவல் தொடா்பு சாதனங்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. இதை மீறினால் ஆசிரியா்கள், மாணவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.




மேலும், முதன்மைக் கல்வி அதிகாரிகள் எழுத்துப்பூா்வமான ஆணைகள் வழியாக மட்டுமே பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். ஒருபோதும் வாய்மொழி ஆணைகள் வழங்கக்கூடாது. இதுதவிர தோவின்போது காப்பி அடித்தல், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் உட்பட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தோவா்கள் அதிகபட்சம் 5 ஆண்டுகள் தோவெழுத தடை விதிக்கப்படும். மேலும், தோவா்கள் ஆள்மாறாட்டம் செய்தது கண்டறியப்பட்டால் உடனே காவல் துறையிடம் புகாா் அளித்து வழக்குப் பதிவு செய்து தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.