THAMIZHKADAL TODAY NEWS

10-வது தேர்ச்சியா? ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை

!
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் Chennai Metropolitan Development Authority (CMDA) பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், களப்பணியாளர், செய்தியாளர் என பல்வேறு துறைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.




நிர்வாகம் : சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 131

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்
இளநிலை உதவியாளர் : 34
சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III : 24
தட்டச்சர் : 10
களப்பணியாளர் : 19
செய்தியாளர் : 44




பணியிட விபரங்கள்:

இளநிலை உதவியாளர் - 34

கல்வித் தகுதி - இப்பணியிடத்திற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III - 24

கல்வித் தகுதி - இப்பணியிடத்திற்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அத்துடன் தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் - மாதம் ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையில்

தட்டச்சர் - 10

தகுதி - விண்ணப்பதாரர்கள் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.




ஊதியம் - மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

களப்பணியாளர் - 19

கல்வித் தகுதி - 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதி - சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம் - மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

செய்தியாளர் - 44

கல்வித் தகுதி - இப்பணியிடத்திற்கு 8 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.




ஊதியம் - ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.cmdachennai.gov.in/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேரடியாகக் காண இங்கே கிளிக் செய்யவும். http://109.73.234.178/cmdarecruitment/cmda-directrecruitment2020.pdf
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel