Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 8, 2020

பொறியியல் படிப்பதற்கான ஜெஇஇ தேர்வு விண்ணப்பப்பதிவு தொடக்கம்!


பொறியியல் படிப்பதற்கான தேசிய நுழைவுத் தேரிவிற்கு (Joint Entrance Examination JEE) ஆன்லைன் மூலமான விண்ணப்பப்பதிவு இன்று முதல் (பிப்ரவரி 7) தொடங்கியுள்ளது.




ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் பொறியியல் கல்வி கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி, 2020 ஆண்டிற்கான ஜேஇஇ மெயின் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது.
தேசிய தேர்வு முகமையின் சார்பில் நடைபெறும் இத்தேர்வில் 12ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் ஜேஇஇ நுழைவுத்தேர்வை எழுதி தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம். மார்ச் 7 ஆம் தேதி வரையில் இந்த விண்ணப்பப்பதிவு நடைபெறும்.




விண்ணப்பதாரர்களுக்கு JEE Main April 2020 தேர்வுக்கான தேர்வு நுழைவுச் சீட்டு மார்ச் 16 ஆம் தேதியன்று ஆன்லைனில் வெளியிடப்படும். ஏப்ரல் 5, 7, 8, 9, 11 ஆகிய தேதிகளில் JEE தேர்வுகள் நடைபெறும். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியிடப்படும். https://jeemain.nta.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் JEE Main April 2020 பகுதியில் விண்ணப்பிக்க வேண்டும்.