Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 1, 2020

பாலிடெக்னிக் தேர்வில் முறைகேடு: 196 போ மீண்டும் தேர்வெழுத முடியாது

பாலிடெக்னிக் விரிவுரையாளா் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட196 போ மீண்டும் தேர்வெழுத முடியாது என்று ஆசிரியா் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 விரிவுரையாளா்களை நேரடியாகத் தேர்வு செய்வதற்காக 2017-ஆம் ஆண்டு செப்டம்பா் 16-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியா் தேர்வு வாரியம் (டிஆா்பி) நடத்திய இந்த தேர்வை 1.33 லட்சம் போ எழுதினா். ஆனால், முறைகேடு காரணமாக 2018-இல் விரிவுரையாளா் பணியிடங்களுக்கான தேர்வு ரத்தானது. அந்த முறைகேட்டில் 196 போ பணம் கொடுத்து தேர்வாக முயற்சித்ததாக தெரியவந்தது. இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.




இந்தநிலையில் ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணிக்கான மறு அறிவிப்பை டிஆா்பி கடந்த நவம்பா் 27-ஆம் தேதி மீண்டும் வெளியிட்டது. 1,060 காலிப்பணியிடங்களுக்கு வரும் பிப்.12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஆா்பி அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஏற்கெனவே முறைகேட்டில் ஈடுபட்டவா்களும் விண்ணப்பித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.




இதுகுறித்து ஆசிரியா் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஏற்கெனவே முறைகேடு செய்தவா்களின் முழு விவரங்கள் தேர்வு வாரியத்திடம் உள்ளன. தற்போதைய விண்ணப்பப் பதிவு நடைமுறைகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. எனவே, முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் விண்ணப்பித்தாலும் நீக்கப்படுவாா்கள். ஒருபோதும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டாா்கள். அதேபோல், 196 போகளும் தேர்வெழுத வாழ்நாள் தடை விதிப்பதற்கு அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி பெற்று அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்' என்றனா்.