Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 1, 2020

ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் அரசாங்க வேலை


சென்னை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 203 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு உள்ளூரிலேயே ரூ.47 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.Chennai District Cooperative Bank Recruitment 2020
சென்னை மத்திய கூட்டுறவு வங்கி




Tamil Nadu Cooperative Recruitment சார்பில் சென்னையில் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. www.chndrb.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சுமார் 203 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

Chennai District Cooperative Bank Recruitment 2020
காலிப் பணியிட விபரங்கள்




மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு மொத்தம் 203 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப்பிரிவு - 63, பிற்படுத்தப்பட்டோர் - 54, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் - 41, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) - 6, ஆதிதிராவிடர் - 31, ஆதிதிராவிடர் (அருந்ததியர்) -6, பழங்குடியினர் - 2 என இட ஒதுக்கீட்டு முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.14,000 முதல் ரூ.47,500 வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Chennai District Cooperative Bank Recruitment 2020




கல்வித் தகுதி:
சென்னை மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதோடு, கூட்டுறவுப் பயிற்சியும் முடித்திருக்க வேண்டும்.
Chennai District Cooperative Bank Recruitment 2020
வயது வரம்பு:
இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு 01.01.2019 அன்றைய தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உதவியாளர் பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.




Chennai District Cooperative Bank Recruitment 2020
முக்கிய நாட்கள்:-
சென்னை கூட்டுறவு வங்கி வேலை அறிவிப்பு வெளியான நாள் - 30 ஜனவரி 2020
விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் - 30 ஜனவரி 2020
விண்ணப்பிக்கக் கடைசி நாள் - 26 பிப்ரவரி 2020
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - 29 மார்ச் 2020
Chennai District Cooperative Bank Recruitment 2020




மேலும் விபரங்களுக்கு!
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://chndrb.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று பூர்த்தி செய்து பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.