Friday, February 28, 2020

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு ஆன் லைனில் வரும் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, வரும் 6ம் தேதிக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் அரசு மருத்துவ கல்லுாரி, மூன்று தனியார் மருத்துவ கல்லுாரிகளில் மொத்தம் 181 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில் கடந்தாண்டு 84 சீட்டுகள் அரசு ஒதுக்கீடாகவும், 85 சீட்டுகள் நிர்வாக ஒதுக்கீடாக நிரப்பப் பட்டன.



அரசு மருத்துவ கல்லுாரியில் மொத்தமுள்ள 12 மேற்படிப்பு இடங்களில் 6 சீட்டுகள் அகில இந்திய ஒதுக்கீட்டிலும், 6 இடங்கள் அரசு ஒதுக்கீட்டிலும் நிரப்பப்பட்டனஇந்தாண்டிற்கான முதுநிலை படிப்பிற்கான விண்ணப்பங்கள், வரும் 6ம் தேதி வரை, www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் ஆன்-லைனில் பெறப்படும் என சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மார்ச் 10ம் தேதி வரைவு மெரிட் லிஸ்ட், 16ம் தேதி இறுதி மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட உள்ளது.முதல் கட்ட கலந்தாய்வு 25ம் தேதி, ஏப்ரல் 20ல், இரண்டாம் கட்ட கலந்தாய்வு, மே 5ம் தேதி 'மாப்அப்' கவுன்சிலிங் நடக்க உள்ளது.கட்டணம்தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் கிளினிக்கல் சார்ந்த



பாடப்பிரிவுகளுக்கு 7.59 லட்சம், கிளினிக்கல் சாராத பாடப்பிரிவுகளுக்கு 6.22 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டில் கிளினிக்கல் சார்ந்த பாடப்பிரிவுக்கு 22.77 லட்சம், கிளினிக்கல் சாராத பாடப்பிரிவுக்கு 12.44 லட்சம் கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.மாகி பல் மருத்துவ கல்லுாரியில் முதுநிலை பல் மருத்துவம் சார்ந்த கிளினிக்கல் படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடத்திற்கு 6.22 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டு இடத்திற்கு 14 லட்சம் ரூபாய் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News