Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 28, 2020

மூன்று ஆண்டாக பூமியை சுற்றும் 'குட்டி நிலா'



கேம்பிரிஜ்: 'கடந்து மூன்று ஆண்டுகளாகக் குட்டி நிலவு ஒன்று பூமியை சுற்றி வருகிறது. ஆனால், நீண்ட காலத்திற்கு அந்த நிலவு நம்முடன் இருக்காது' என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் உலவும் சிறு கோள்கள் குறித்து ஆய்வுகளை நிகழ்த்தி வரும், கேம்பிரிஜில் உள்ள, 'மைனர் பிளானட் சென்டர்' விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பூமியைச் சுற்றி வரும் புதிய, 'குட்டி நிலவு' ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு, '2020 சிடி' எனப் பெயரிட்டுள்ளோம். கடந்து மூன்று ஆண்டுகளாக இந்தக் குட்டி நிலவு பூமியை வலம் வந்துகொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இதைக் கண்டறியாமலேயே இருந்திருக்கிறோம்.



இந்த நிலவு நம்முடன் நீண்ட காலம் இருக்காது. இது பூமியை மோதுவதற்கான சாத்தியமும் உண்டு. ஆனால், மிகவும் சிறியதாக இருப்பதால், தரையைத் தொடும் முன் வளிமண்டலத்திலேயே எரிந்து விடும். இதற்கு முன்னர், 1991ம் ஆண்டு '1991 விஜி' எனப் பெயரிடப்பட்ட குட்டி கோள் ஒன்று பூமியைச் சில ஆண்டுகள் சுற்றி வந்தது. பின்னர் அது வேறு பாதையில் பூமியை விட்டு வெகு தூரம் சென்றது. அதேபோல், 2006-ம் ஆண்டு இது போன்ற ஒரு விண்கல் பூமியைச் சுற்றி வந்தது. அதன் பிறகு தன் பாதையில் சென்று விட்டது.சூரியன், பூமி மற்றும் நிலா ஆகியவற்றின் ஆதிக்கம் குட்டி நிலவின் மீது இருப்பதால், அதன் பாதை எப்போது வேண்டுமானாலும் மாறுபடலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.