Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, February 19, 2020

தீராத தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இதோ அருமருந்து!


தீராத தலைவலியை தீர்க்க உதவும் கரிசலாங்கண்ணிக் கீரை சோம்பு கசாயத்தை பயன்படுத்தி பயனடையுங்கள்.
தேவையான பொருட்கள்
கரிசலாங்கண்ணிக் கீரை - ஒரு கைப்பிடி
சோம்பு. - ஒரு ஸ்பூன்
மிளகு. - 10
மஞ்சள் தூள். - சிறிதளவு




செய்முறை
முதலில் கரிசலாங்கண்ணிக் கீரையை நன்றாக கழுவி ஆய்ந்து கொள்ளவும். மிளகை தூள் செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் கீரை , சோம்பு மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்து நீரை 150 மி.லி அளவாகச் சுண்ட வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு குடிக்கவும்.
பயன்கள்
இந்தக் கசாயத்தை தலைவலியினால் துன்பப்படும்பொழுது தயார் செய்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும். தொடர்ந்து தலைவலியினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கசாயத்தை தினமும் ஒருவேளை வெறும் வயிற்றில் 48 நாட்களாவது குடித்து வந்தால் தீராத வலைவலியும் தீரும்.




இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும். - கோவை பாலா