Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 22, 2020

பென்சன்தாரர்கள் ஆன்லைனில் லைப் சான்றிதழ் அளிக்கும் வசதி!

இபிஎப்ஓ (EPFO - Employees' Provident Fund Organisation) கீழ் பென்சன்தாரர்கள், ஒரு ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் ஆன்லைனில் லைப் சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
பென்சன்தாரர்கள் லைப் சான்றிதழ் அல்லது ஜீவன் பிரமாண பத்ரா முறையில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்தத்தால் 64 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.



இது தொடர்பாக இபிஎப்ஓ பதிவிட்டுள்ள டுவீட்டில், ஒரு ஆண்டில் தங்களுக்கு வசதியான எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பென்சன்தாரர்கள் லைப் சான்றிதழை சமர்பிக்கலாம். இந்த சான்றிதழ், சமர்ப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து அடுத்த ஓராண்டு வரை செல்லும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வரை, பென்சன்தாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவ.,1 முதல் நவ.,30 ம் தேதிக்குள் லைப் சான்றிதழை சம்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. அவ்வாறு லைப் சான்றிதழ் சம்பிக்க தவறியவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஓய்வூதிய தொகை நிறுத்தப்படும்.




தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய முறையால் பென்சன்தாரர்கள் நவம்பர் மாதத்திற்காக காத்திருக்க வேண்டியதில்லை. தங்களுக்கு வசதியான நேரத்தில் சான்றிதழை சமர்பிக்கலாம். ஒருமுறை சமர்ப்பித்தால் அடுத்த 12 மாதங்களுக்கு அந்த சான்றிதழ் செல்லுபடியாகும்.