Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 22, 2020

உடலுக்கு அதிக அளவு சக்தியைத் தரும் கொள்ளு பற்றி தெரிந்து கொள்வோம்.


கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன் உடலிள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்துவிடும். வளரும் குழந்தைகளுக்கும் உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது.
அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது.




சிக்குன்குனியா நோய் பாதித்தவர்களுக்குக் கூட கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆந்திராவில் மஞ்சள் காமாலை நோய்க்கு கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள். அது மட்டுமின்றி, கொள்ளை வேக வைத்து மசித்து, சருமப் பிரச்னைகளுக்குத் தடவுகிறார்கள்.
கொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் மக்களிடையே ஒரு எண்ணம் உண்டு. கொள்ளு சூடானது என்பது உண்மைதான், அதாவது, வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.




குதிரை குண்டாக இருந்தால் அதனால் வேகமாக ஓட முடியாது. கொள்ளு கொடுப்பதால் தான் குதிரை கொழுப்பின்றி, சிக்கென்று இருக்கிறது. உடல் திண்மையுடன் வேகமாக ஓடுகிறது. எனவே அதை வைத்து உடனே மனிதர்களுக்கு கொடுக்கக்கூடாது என்ற மனநிலைக்கு வரவேண்டாம். தொடர்ந்து ஒருவர் கொள்ளு ஏதாவது ஒரு முறையில் சாப்பிட்டு வந்தால் அவருக்கு எந்தவித நோயும் வராது. எதிர்காலத்தில் உடலில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.