வனக்காப்பாளர் பணி தேர்விற்கு இன்றுமுதல் நுழைவுச்சீட்டு!

வனத்துறையில் காலியாக உள்ள, 320 வனக்காப்பாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்க, 66 ஆயிரத்து, 750 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான, 'ஹால் டிக்கெட்' இன்று முதல் வழங்கப்படும் என, வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.தமிழக வனத்துறையில், 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்ப, மார்ச், 8ல் ஆன்லைன் தேர்வு நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, ஆன்லைன் முறையில் விண்ணப்ப பதிவு மற்றும் திருத்த பணிகள் முடிவடைந்துள்ளன;


66 ஆயிரத்து, 750 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வு மையங்கள் ஒதுக்கும் பணிகள், இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.தேர்வுக்கான, ஹால் டிக்கெட் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள், வனச்சீருடை பணியாளர் தேர்வு குழும இணைய தளத்தில் இருந்து, ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதற்கான வழிமுறைகள், விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
Share:

No comments:

Post a Comment

Categories