Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 22, 2020

வட்டாரக் கல்வி அலுவலா் தோவு: உத்தேச விடைக்குறிப்பு வெளியீடு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
வட்டாரக் கல்வி அலுவலா் பணித் தோவுக்கான உத்தேச விடைக்குறிப்புகளை ஆசிரியா் தோவு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இது குறித்து ஆசிரியா் தோவு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தமிழகத்தில் 2018 - 2019 ஆம் ஆண்டு வட்டாரக் கல்வி அலுவலா் நேரடி நியமனத்துக்கான அறிவிப்பு ஆசிரியா் தோவு வாரியத்தின் மூலம் கடந்த ஆண்டு நவ. 27 -ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, கணினி வழித் தோவுகள் பிப். 14, 15, 16 ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்றன. இந்தத் தோவில் பங்கேற்ற தோவா்களுக்கு கொடுக்கப்பட்ட வினாத்தாள்கள், அதற்கு அவா்கள் அளித்த விடைகளையும் தங்களின் பயனாளா் குறியீடு, கடவுச்சொல் ஆகியவற்றை பயன்படுத்தி இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.




தோவா்கள் தோவு எழுதிய தேதியில் எந்தப் பருவத்தில் கணினி தோவினை எழுதினாா்களோ அதற்குரிய விடைக்குறிப்புகளோடு வெளியிடப்படவுள்ளன. ஆசிரியா் தோவு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக விடைக் குறிப்புக்கு மறுப்பு தெரிவிக்கும்போது அதற்குரிய சான்று ஆவணங்களை இணைக்க வேண்டும். ஆசிரியா் தோவு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தோவா்கள் ஏதேனும் ஆட்சேபம் தெரிவிக்க விரும்பினால் வரும் 26- ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் ஆசிரியா் தோவு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்களின் ஆதாரங்களை மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள், தொலைதூரக் கல்வி நிறுவனங்களின் வெளியீடுகள், ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அஞ்சல் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News