Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 14, 2020

சென்னை,உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் போகர் சித்தர் பெயரில் ஆய்விருக்கை !

கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போகர் சித்தர் பெயரில் ஆய்விருக்கைத் தொடங்கப்பட்டது. போகர் சித்தர் அவர்கள் தமிழகத்தில் பிறந்து சில காலம் சீனாவில் தங்கி தமிழ் மருத்துவ முறைகளை சீனாவில் பயிற்றுவித்தவர். அவர் பெயரில் அமைக்கப்பட்ட இவ்வாய்விருக்கை தமிழரின் இயற்றமிழ் மருத்துவம், தமிழர் பாரம்பரிய உணவு முறைகள் குறித்து ஆய்வினை மேற்கொள்ளும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் திங்களை முன்னிட்டு நடைபெற்றுவரும்



தமிழ்த்தாய் 72 – தமிழாய்வுப் பெருவிழாவின் 14ஆம் நாள் (14.02.2020) நிகழ்வாக, முற்பகல் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அறக்கட்டளை சார்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையில் நிறுவன உதவிப்பேராசிரியர் முனைவர் கு.சிதம்பரம் அவர்கள் வரவேற்புரையாற்றிட, “தண்டியலங்கார அணிகளும் ஐந்திலக்கண நூல்களின் அணிகளும் – ஓர் ஒப்பீடு” என்ற தலைப்பில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இரா. இந்துபாலா அவர்களின் சொற்பொழிவும் நூல் வெளியீடும் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் நூலினை வெளியிட கனடா கல்வியார் முனைவர் சு.இராசரத்தினம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.



உடன் சென்னை முத்தமிழ்ச் சங்கம் இராமமூர்த்தி, அரிமாசங்கத் தலைவர் திரு. கிருஷ்ணன், நூலாசிரியர் முனைவர் இரா. இந்துபாலா,பத்திரிகையாளர் அக்னிபாரதி, நிறுவன உதவிப் பேராசிரியர் மற்றும் அறக்கட்டளைப் பொறுப்பாளர் முனைவர் கு.சிதம்பரம். பிற்பகல் நிகழ்வாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் போகர் ஆய்விருக்கை தொடக்க விழாவும் அதனைத் தொடர்ந்து உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு (ம) தகவல் மையம் சார்பில் மதுரை போகர் சாம்ராஜ்ஜியம், இயற்றமிழ் மருத்துவ நிபுணர், திரு. ர.பாட்லீஸ் கண்ணன் அவர்களின் “தமிழும் வாழ்வும்” எனும் தலைப்பில் அமைந்த சிறப்புச் சொற்பொழிவும் நடைபெற்றது.