Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 1, 2020

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதங்கள் மாற்றம்


நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வருமான வரி செலுத்துவோர் இரு விதங்களில் வரி செலுத்தும் வகையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட்டில் வருமான வரி குறித்து நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், ரூ. 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.




ரூ. 5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு இதுவரை இருந்த 20% வருமான வரி 10 % ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் இதுவரை செலுத்தி வந்த வருமான வரி 20%-ல் இருந்து 15% ஆகக் குறைக்கப்படுகிறது.
மேலும், ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் இதுவரை செலுத்தி வந்த வருமான வரி 30%-ல் இருந்து 20% ஆகக் குறைக்கப்படுகிறது.
ரூ. 12.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோரின் வருமான வரி 30% இருந்து 25% ஆகக் குறைக்கப்படுகிறது.
ரூ.15 லட்சத்துக்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டுவோரின் வருமான வரி 30% ஆகவே நீடிக்கும்.
ரூ. 5 லட்சம் வரை வருமான வரி இல்லை




ரூ.5 - 7.5 லட்சம் வரை : 10%
ரூ.7.5 - 10 லட்சம் வரை : 15%
ரூ.10 - 12.5 லட்சம் வரை: 20%
ரூ.12.5 - 15 லட்சம் வரை: 25%
ரூ.15 லட்சத்துக்கு மேல்: 30% ஆகவே நீடிப்பு
ஆனால், புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் முறைப்படி வரி செலுத்த முன்வருவோர், பழைய நடைமுறையில் உள்ள வீட்டுக் கடன், காப்பீடு போன்ற வரிச் சலுகை ஏற்பாடுகள் எதையும் பயன்படுத்திக் கொள்ள முடியாது.




ஏற்கெனவே நடைமுறையில் உள்ளபடி வீட்டுக் கடன், 80சி, மருத்துவக் காப்பீடு, வீட்டு வாடகை அலவன்ஸ், இதர வரிக் கழிவுகள் போன்றவற்றுக்குக் கிடைக்கும் வரிச் சலுகைகளையே தொடர விரும்பினால் பழைய விகிதப்படியே கணக்கிட்டு வரி செலுத்தலாம். வரிவிகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை.
அல்லாமல், ஏற்கெனவே இருக்கும் வரிச் சலுகைகளைக் கைவிட்டு, புதிய முறையில் வரி செலுத்த முன்வந்தால், புதிய வரி விகித முறையில் கணக்கிட்டு வருமான வரி செலுத்தலாம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.