
தொப்பை பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருந்துவருகிறது. சிறுவர்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அனைவரும் அவதிப்படுவது தொப்பை பிரச்சனைக்கு என்று கூட சொல்லலாம். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் அனைத்தும் வயிற்றில் அதிகம் தேங்கிவிடுவதால் அந்த இடத்தில் தொப்பையும் எளிதாக வருகிறது.
உடல் உழைப்பின்மை, உணவு முறை மாற்றம், எண்ணெய் தின்பண்டங்கள் இப்படி எல்லாமாய் சேர்ந்து நமக்கு கொடுத்த பரிசுதான் அதிகரித்துவரும் உடல் எடை. உடல் எடை அதிகரிப்பால் அவதி என்பதை தாண்டி தொப்பையால் அவதிபடுபவர்கள் அதிகம். குறிப்பாக பெண்கள். டீன் ஏஜ் பெண்கள் தொப்பையை குறைக்கிறேன் என்று போதிய ஊட்டசத்து உணவை எடுப்பதில்லை. இதனால் குண்டு உடல் சத்தில்லாமல் போவதோடு இரும்புச்சத்து குறைபாடு உண்டாகி அனீமியா என்னும் இரத்த சோகை வரை உண்டாக்கிவிடுகிறது. ஆனாலும் தொப்பை மட்டும் இருக்கிறது என்று கவலைகொள்வார்கள்.


