Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 19, 2020

தீராத மலச்சிக்கலை போக்க உதவும் கசாயம்



மலச்சிக்கல் பிரச்னைக்கு கரிசலாங்கண்ணிக் கீரை கடுக்காய் கசாயம் குடித்து பாருங்கள் விரைவில் குணமாகும்.
தேவையான பொருட்கள்
கரிசலாங்கண்ணிக் கீரை - ஒரு கைப்பிடி
கடுக்காய் தோல் - 2
மஞ்சள் தூள் - சிறிதளவு




செய்முறை
முதலில் கரிசலாங்கண்ணிக் கீரையை நன்றாக அலசி ஆய்ந்து கொள்ளவும். கடுக்காயை உடைத்து உள்ளே உள்ள கொட்டையை நீக்கி தோலை மட்டும் எடுத்து நன்கு தட்டிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் கீரை , கடுக்காய்த் தோல் மற்றும் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்து நீரை 150 மி.லி அளவாகச் சுண்ட வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு குடிக்கவும்.
பயன்கள்
தீராத மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு தீர்வாக அமையும் கசாயம். தினமும் காலை வேளையில் இந்தக் கசாயத்தை தயார் செய்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் குறைபாடு நீங்கும்.




இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா