Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, February 3, 2020

அனைத்து பள்ளிகளிலும் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல்சார் மன்றம் ( Youth & Eco Club ) ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.





ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2019 - 20ஆம் ஆண்டு ( தொடக்கநிலை / இடைநிலை ) வாயிலாக அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல்சார் மன்றம் ( Youth & Eco Club ) ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது . அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் வளர்ச்சியிலும் , சமுதாய மேம்பாட்டிலும் , சுற்றுப்புற சூழலை பாதுகாப்பது இன்றியமையாததாகிறது .




மாணவர்களுக்கு சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழல் அமைப்பு சார்ந்த கருத்துக்களை கற்பித்து , சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தி தூய்மையான மற்றும் பசுமையான சூழலை மாணவர்கள் மூலமாக உருவாக்குவது இம்மன்றத்தின் நோக்கமாகும் . இதற்காக 2019 - 20 ஆம் கல்வி ஆண்டில் அரசு தொடக்க , நடுநிலை , உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கீழ்க்கண்டவாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .