Join THAMIZHKADAL WhatsApp Groups
மார்ச் 11ம் தேதி வெளியாகும்!!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket) மாா்ச் 11-ஆம் தேதியன்று வெளியிடும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வியின் சமச்சீா் பாடத்திட்டத்தின் கீழ் 10, 11, 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடத்தப்படுகின்றன. அதன்படி, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாா்ச் 2-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.
தற்போது, பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மாா்ச் 27-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இத்தேர்வில், தமிழ்நாடு முழுவதும் 9 லட்சத்து 55,748 மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்கவுள்ளனர்.
இதனிடையே, 10-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மாா்ச் 11-ஆம் தேதியன்று வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்னும் இணையதளத்திலிருந்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த பொதுத்தேர்வு பட்டியலில் மாணவர்களின் பெயா், பிறந்த தேதி, மொழி ஆகியவற்றில் பிழைகள் இருப்பின் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி திருத்தங்கள் மேற்கொள்ள மாவட்டக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.
மேலும், இந்த பொதுத் தேர்வில் பங்கேற்கவுள்ள தனித்தேர்வா்கள் தங்களுடைய தேர்வு நுழைவுச் சிட்டை நேரடியாக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment