Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 16, 2020

7 முதல் 9-ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு

7 முதல் 9-ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கும் நோக்கில் கர்நாடக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 1 முதல் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 7 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்த வகுப்புகளின் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு நாள்களில் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், கர்நாடகத்தில் கரோனா வைரஸ் நோயின் பீதி நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, 7 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடத்த திட்டமிட்டிருந்த பொதுத் தேர்வு மார்ச் 31-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வு அட்டவணை வெகு விரைவில் வெளியிடப்படும்.



மார்ச் 31-ஆம் தேதி வரை 7 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு ஏற்கெனவே திட்டமிட்டப்படி மார்ச் 27-ஆம் தேதி முதல் தொடங்கும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை.
மார்ச் 14-ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு மக்கள் கூடுமிடங்களைத் திறந்து வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்றார் அவர்.

No comments:

Post a Comment