Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 16, 2020

கொரோனா: 9 ஆம் வகுப்பு வரைக்கும் விடுமுறை! கோரிக்கை வைக்கும் ஆசிரியர் சங்கம்!


கொரோனா பாதிப்பை முன்னிட்டு ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தினர், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாதுகாப்பு கவசங்களை அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்




பொது தேர்வு எழுதும் பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நாட்களை தவிர பிற நாட்களில் விடுமுறை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்.

அனைத்து அரசு பள்ளிகளுக்கும் நிரந்தர துப்புரவு பணியாளர் நியமிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment