Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 12, 2020

கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கும் பீட்ரூட்..!


ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 1.7 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மேலு‌ம், கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 55 மில்லி கிராமும், இரும்பு 1.0 மில்லிகிராமும், வைட்டமின் சி 10 மில்லிகிராமும், வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்பர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் உள்ளன.



பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.
கிட்னி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது.
பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.
பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.
பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு பீட்ரூட் ஜூசுடன் தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

No comments:

Post a Comment